Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எய்ம்ஸ் மருத்துவமனையில் 2551 நர்சிங் ஆபீசர்

பணி: நர்சிங் ஆபீசர்.

மொத்த காலியிடங்கள்: 2551 இடங்கள். (எய்ம்ஸ் மருத்துவமனை வாரியாக காலியிடப் பகிர்வு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.)

சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800.

வயது: 18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஜிஎன்எம் படித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதிக்கு பின்னர் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.எய்ம்ஸால் நடத்தப்படும் ‘நார்செட்’ ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்வு ஏப்.11ம் தேதியும், 2ம் கட்டத் தேர்வு ஏப்.30ம் தேதியும் நடைபெறும்.

கட்டணம்: பொது/ஒபிசி பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம். எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2400/-. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முதல் கட்ட எழுத்துத் தேர்வில் 100 ஆப்ஜக்டிவ் டைப் வினாக்கள் கேட்கப்படும். இதில் பொதுஅறிவு, அப்டிடியூட் மற்றும் ஜெனரல் நர்சிங் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வில் நர்சிங் பாடப்பிரிவிலிருந்து 160 மதிப்பெண்களுக்கு ஆப்ஜக்டிவ் டைப் வகை கேள்விகள் கேட்கப்படும்.எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:16.03.2026.