Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவுவது அநியாயம்: பாலகிருஷ்ணன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: புதுச்சேரியில் இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பாஜக- என்ஆர் காங்., கூட்டணிக்குள் ஒற்றுமை ஏற்படாததால் அரசு நிர்வாகம் செயல்படாமல் இருக்கிறது. பேய்க்கு வாக்கப்பட்டால் எப்படி இருக்க வேண்டுமோ, அதுபோல் தான் ரங்கசாமி உள்ளார்.

தமிழகத்தில் அதிகாரிகளை அழைத்து கவர்னர் ஆலோசனை நடத்துவதற்கோ, உத்தரவிடுவதற்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அவ்வாறு ஆளுநர் செய்திருந்தால், அது தவறு. அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சிக்கு செல்வதை நியாயமான நடவடிக்கையாக மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கவில்லை. இயற்கையான காரணங்களால் இடைத்தேர்தல் வரலாம். ஆனால், இடைத்தேர்தலை உருவாக்கும் வகையில் செயல்படுவது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும். தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை. இந்த ஆட்சியில் ஊழல் முறைகேடு நடந்தால் நிச்சயமாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.