Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொங்கும் பாஜ

மதுரையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘‘நீங்கள் இன்னும் எதிர்பார்க்கின்ற பிற கட்சிகளும் சேர்ந்து வரும் 28ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பல லட்சம் கற்களால் எய்ம்ஸ் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது. பணிகள் முடிந்த பிறகு பிரதமர் திறந்து வைப்பார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்ட பிரதமர் வந்த அதே இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. இன்னும் விசிலை வைத்து அடித்துக்கொண்டு இருந்தால் ஒண்ணும் நடக்காது. மதுரை வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது. பாஜவும் கொள்கை அடிப்படையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும். இறுதியில் இருவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றார்.