கும்பகோணம்: கும்பகோணத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் ஏற்பட்டுள்ளது உள்கட்சி பிரச்சனை. அது குறித்து எந்தவித கருத்தும் சொல்ல இயலாது. டெல்டா மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாஜ என்பது வேறு தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படும் தனி அமைப்பு. இதில் கட்சி சார்பில் நாங்கள் எதுவும் தலையிட முடியாது. கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்த முறையான விசாரணை நடைபெற்ற பிறகு தான் அது குறித்து பேச முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
