அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் டெல்லி உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்ட நடவடிக்கைக்கு எதிராகவும், மேலும் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜோதி சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘‘இரட்டை சிலை சின்னம் தொடர்பான விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது கிடையாது.
ஏனெனில் இதே கோரிக்கை கொண்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனுவையும் நீதிமன்றம் நிகாரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘‘இந்த வழக்கு தொடர்பாக வாதங்களை முன்வைக்க இருந்த வழக்கறிஞர் ஆஜராகவில்லை. எனவே இதுதொடர்பான விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைக்கிறோம். அடுத்த முறை இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. கண்டிப்பகாக மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க வேண்டும். இருப்பினும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
* நிலுவை வழக்குகள் முடியும் வரையில் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் வழங்க கூடாது: தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு
தலைமை தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற தேர்தலின் போது வழங்கப்பட்டது. இதில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் யாருக்கும் வழங்கப்படக் கூடாது. என்று தெரிவித்துள்ளார்.