Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அதிமுகவில் குழப்பம்; எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு: தவெகவை ஆதரிப்பது குறித்து ஆலோசனை?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சதுரங்கம் சூடுபிடித்துள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்காகத் தனது கூட்டணி வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளது. 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தொடர்ந்து தவெக தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.-விடம் ஆதரவு கேட்டுள்ளது. தவெகவை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும் என சி.வி.சண்முகம் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது. சி.வி.சண்முகத்தை சந்தித்து வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி வீட்டுக்குச் செல்லாமல் சி.வி.சண்முகத்தை அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா சந்தித்து பேசினர். தவெகவை ஆதரிக்க பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர். தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது எடப்பாடியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். எடப்பாடியுடன் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். தவெகவை ஆதரிக்க எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.