தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்; கோமாளி விசில் கூட்டம் திமுகவை தொட்டு பார்க்ககூட முடியாது: திண்டுக்கல் லியோனி திட்டவட்டம்

 

Advertisement

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வியில் 46 சதவீதத்தை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. எல்லா மதங்களும் ஒன்றே. எந்த மத வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்த கூடாது. நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்து வந்தவர்கள் தாம்.

இடையில் ஏற்படுத்தி கொண்டதுதான் மதம். மத ஒற்றுமை, சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே இயக்கம் திமுகதான். எல்லோருக்கும் எல்லாம். 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனை. முதலமைச்சரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று 10 மாநிலங்கள் பின்பற்றுகின்றன. பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று 11 மாநிலங்கள், லண்டன், கனடா போன்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. துரோகிகளின் கூடாரமாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. பாஜவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக மிகவும் கேவலமான தோல்வியை சந்திக்கும். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை போன்று பில்டப் காட்டி இன்று கோமாளி போல மாறிவிட்ட விசில் கூட்டம் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News