Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளையும், சாதனைகளையும், மக்கள் நலப் பணிகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, திருநங்கை அப்சரா ரெட்டி அவர்களை துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா ரெட்டி, ஜெயலலிதா எப்போதும் சமத்துவம், சமூக நீதி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற உயரிய கொள்கைகளுக்காக வாழ்ந்த தலைவர் என்றும் இன்று அதே உயரிய இலட்சியங்களை வழிகாட்டியாகக் கொண்டு கழகத்தை முன்னெடுத்து வரும் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ், இந்தப் புதிய பொறுப்பு எனக்கு மேலும் கடினமாக உழைக்கவும், கழகத்தை அடித்தளத்தில் இன்னும் வலுப்படுத்தவும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உயரிய லட்சியங்களையும், ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளையும்,

எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தொலைநோக்குப் பார்வையையும் வழிகாட்டியாகக் கொண்டு, கழகத்தின் கொள்கைகளையும் சாதனைகளையும் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சேர்த்து, அடிமட்டத்தில் கழகத்தை மேலும் வலுப்படுத்த முழு அர்ப்பணிப்புடனும் பணிவுடனும் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்