அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளர் போக்சோ வழக்கில் கைது!
05:33 PM Oct 30, 2024 IST
Share
Advertisement
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளர் தீபன் (33) போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு கட்சிப்பொறுப்பு வழங்கப்பட்ட இவர், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.