அதிமுக உடையவில்லை: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
புதுக்கோட்டை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. இருப்பினும் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
Advertisement
இன்னும் ஒரு சட்டமன்ற தேர்தலை கூட விஜய் சந்திக்கவில்லை. பாஜவை விமர்சித்து பேசும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெறுவேனா, தோல்வியடைவேனா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு பதவி காலம் மூன்று ஆண்டுகள்.
அதற்குள்ளாகவே வேறு தலைவர் மாற்றப்படலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக உடையவில்லை. அதிலிருந்து செங்கோட்டையன் மட்டும் வெளியேற்றப்பட்டார். பாஜ கூட்டணியிலிருந்து டிடிவி.தினகரன், ஓபிஎஸ் அவர்களாக விலகி விட்டனர். நாங்கள் விலக்கவில்லை. இவ்வாறு கூறினார்.
Advertisement