Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இபிஎஸ்-ன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள்

சென்னை: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கட்சிக்குள் பல உட்பூசல்கள் இருக்கும் நிலையிலும், பேரவைக்கு சிரித்த முகத்துடன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் வருகை தந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பேரவைக்கு வந்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் | எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.