அதிமுகவிடம் இருந்து தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கிடைக்குமா?பிரேமலதா பேட்டி
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை உறுப்பினர் பற்றி நாங்கள் ஏதும் சொன்னோமா? யார், யாரோ சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால், பிரேமலதா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனால், வர உள்ள தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது, அவர், ‘‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று அதிமுக சொன்னது உண்மை தான். வெயிட் பண்ணுங்க. இப்போது தான் தேர்தல் தேதியை அறிவித்து இருக்கிறார்கள். டைம் இருக்கிறது. பார்ப்போம். எங்களுடைய மாநாடு ஜனவரி 9ம் ேததி நடக்க இருக்கிறது. அப்போது எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்’’ என்று கூறினார்.