ஏஐயால் வந்தது சோதனை 1 லட்சம் பேர் டிஸ்மிஸ்: அமேசான், மைக்ரோசாப்ட், இன்டெல் நிறுவன ஊழியர்கள் பீதி
வாஷிங்டன்: அமேசான், இன்டெல், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தாண்டு 1,12,000 பணியாளர்களை நீக்கியுள்ளது. அமேசான் நிறுவனம் 30000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக சுயாதீன கண்காணிப்பு தளமான லே ஆப்ஸ்.எப்ஒய்ஐ தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. தற்போது 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இன்டெல் நிறுவனம் இந்தாண்டு 24,000 பணியாளர்களை குறைக்க உள்ளது. இதன் மூலம் அதன் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 75,000 குறையும். டிசிஎஸ் நிறுவனம் இந்தாண்டு 20,000 பணியிடங்களை குறைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 9000 ஊழியர்களை குறைத்துள்ளது.