Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஏஐ மூலம் சிறுமியின் ஆபாச போட்டோ பள்ளி பஸ் டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

பல்லியா: உத்தரபிரதேசத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் பரப்பிய பள்ளி பஸ் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்ஜீத் குமார். பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது பேருந்தில் பயணித்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் புகைப்படத்தை எடுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி, அதனை தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கேட்ட சிறுமியின் தந்தைக்கு சஞ்ஜீத் குமார் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி பீம்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளி சஞ்ஜீத் குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55,000 அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.