Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆஹா இளநீர்!

முன்பெல்லாம் கோடைக்காலங்களில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். தற்போதைய வெப்பசலனம் காரணமாகவும் காலநிலை மாற்றத்தினாலும் இந்த குளிர் காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட வெயிலின் வெப்பத்தை போக்க மனிதனுக்கு அருமருந்தாக இளநீர் பயன்படுகிறது.

*பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இளநீர் வெப்ப காலத்திற்கு மிகவும் ஏற்றது. இது சிறுநீரக செயல்பாட்டை சிராக்கி சிறுநீர் வெளியேற்றத்துக்கு உதவும் தன்மை வாய்ந்தது.

*வெயிலில் சென்று விட்டு தாகத்துடன் இருக்கும் போது இளநீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். தாகமும் தணியும்.

*உணவுக்கு பின் இளநீர் குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு மினுமினுப்பை தரும். வெயில் காலங்களில் வியர்குரு வந்தால் இளநீரை தடவினால் மறைந்து விடும்.

*இளநீர் குடிப்பதால் உடலில் நீர்சத்து அதிகரித்து நீர் கடுப்பு வருவதை குணப்படுத்தும்.

*எத்தனையோ நன்மைகள் இருப்பினும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அப்படி செய்தால் வயிற்றில் புண் ஏற்பட்டு பசி குறைந்து விடும்.

- ஆ. ஜெயசீலிராணி.