Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

விவசாயம், பால் வளத்துறை நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி

புதுடெல்லி: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குழப்பங்களுக்கு மத்தியில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை விவரிக்கும் இந்திய-அமெரிக்க கூட்டறிக்கை விரைவில் வெளியிடப்படும். பிரதமருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாகவே அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாட்டின் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்புகளைத் திறந்துவிடும். விவசாயம், பால் வளத்துறைகளின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளாமல், மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவும் அமெரிக்காவும் பெற்றுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்’’ என்றார்.