Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேளாண் பட்ஜெட் - கோடை மழையை எதிர்பார்த்தோம்; ஆனால் மின்னல் வெளிச்சமே மின்னுகிறது...

சென்னை: தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் அறிவித்துள்ள திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி சாடியுள்ளார்.

குறிப்பாக மழையால் பாதிக்கப்படும் தானியங்களை பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் தார்பாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். ஒரு தார் பாயினுடைய விலை குறைந்தபட்சம் ரூ.2,500-க்கும் மேல் இருக்கும். இந்த நிலையில் இந்த நிதி போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை.

மாநிலம் முழுவதும் பரவி கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வெறும் ரூ.4 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள். பொக்லைன் இயந்திரத்தின் ஒருநாள் வாடகை, அதை இயக்குபவருக்கான வாடகை என கணக்கிட்டு பார்த்தால் முழு தமிழ்நாட்டிலும் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வெறும் ரூ.4 கோடி போதுமா என கேள்வி எழுப்பி உள்ளார். விவசாயிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான திட்டங்களுக்கு வெறும் ரூ.2 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு இந்த நிதி போதுமானதா? என்று கேள்வி எழுப்பி வேளாண் பட்ஜெட்டில் கோடை மழையை எதிர்பார்த்தோம்; ஆனால் மின்னல் வெளிச்சமே மின்னுகிறது என்று விமர்சித்து உள்ளார்.