Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை: 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நாளான இன்று (14.11.2025) சிவகங்கையில் உள்ள திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்தார்கள்.

கூட்டுறவுத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களும், வங்கிகளும் மிக நீண்ட வரலாற்றையும், சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டதாகத் திகழ்கிறது. அதன்படி, கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் கூட்டுறவுச் சங்கங்கள் “தற்சார்பு இந்தியா” ஒரு கருவி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நாளான இன்று (14.11.2025) சிவகங்கையில் உள்ள திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களால் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது :- அல்லும், பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறைக்கு பல்வேறு சிறப்புகளை கடந்த காலங்களில் செய்துள்ளார்கள். இதன் மூலம் திட்டங்களை மக்களிடத்தி கொண்டுசேர்க்கும் வகையில் சிறந்த பங்களிப்பினை கூட்டுறவுத் துறைக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். நமது கூட்டுறவுத்துறை மக்களுக்காக மக்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற துறையாகும். பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் துறையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான கூட்டுறவுத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டுறவுத்துறை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். இச்செயல்பாடுகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டினார். இதுபோன்ற சிறப்பு வாய்ந்த கூட்டுறவுத்துறையாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த கூட்டுறவு வாரவிழாவில் இன்னும் மென்மேலும் கூட்டுறவுத்துறையின் சிறப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவும் நலத்திட்ட உதவிகள் மக்களிடத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கிலும் செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

கூட்டுறவு வார விழா கருப்பொருளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள், கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம்கள், இரத்த தான முகாம், கால்நடை மருத்துவ முகாம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், கூட்டுறவு தயாரிப்புகளின் கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பொற்கொடி, கலந்து கொண்டார்கள். மேலும் கூட்டுறவு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.