வேளாண் அறிவியல் மையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வேளாண் தொழில் நுட்ப பயிற்சி
*இயற்கை விவசாயம் குறித்து விளக்கம்
தோகைமலை : தோகைமலை அருகே புழுதோரி வேளாண் அறிவியல் மையத்தில் ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப் பள்ளி வேளாண் மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள புழுதோரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பாக சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ஆர்.டி.மலை அரசு மேல் நிலைப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு வேளாண்மை பாடப்பிரிவில் பயிலும் 28 மாணவர்களுக்கு 10 நாட்கள் வேளாண் உள்ளுறை பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா; திரவியம் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் வேளாண் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநார்கள் வேளாண் விhரிவாக்கம் தமிழ்செல்வி, தோட்டக்கலை கவியரசு, மண்ணியியல் மாதிரி கண்ணு, கால்நடை அறிவியல் சரவணன், மனையியல் மாலதி, ஆய்வக உதவியாளா; தமிழ்செல்வன் மற்றும் பண்ணை மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்களுடன் 10 நாட்கள் பயிற்சி அளித்தனர்.
இதில் மண் மாதிரி எடுத்தல், மண் ஆய்வு, மண் புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு, தேனீவளர்ப்பு, அசோலா வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, உணவு கலப்படத்தினை கண்டறிதல், பாலிலா இனப்பெருக்க முறை, ஒட்டுக்கட்டுதல், சொட்டுநீர் பாசன முறை, ஊட்டமேற்றிய தென்னை நார் கழிவு உரம் தயாரித்தல், தரமான விதையை தோ;ந்து எடுத்தல், குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் மாடித்தோட்டம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு தொழில்நுட்பங்களை வேளாண் மாணவா;களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பள்ளியின் தலைமை ஆசிhரியா; திருமுருகன், இயற்பியல் ஆசிhரியா; ஜெரால்டு ஆரோக்கிய ராஜ், தாவரவியல் ஆசிரியர் நடராஜன் மற்றும் தொழில் கல்வி ஆசிhரியா; திவ்யபாரதி உள்பட வேளாண் மாணவவர்கள் பங்கேற்றனர்.