கும்பகோணம், காரைக்குடி உள்ளிட்ட 5 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் வினோத்
சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம்,கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ .4.6 கோடி ஒதுக்கீடில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.


