Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தமிழகம் உள்பட 5 மாநில இளைஞர்களுக்கு அக்னிவீர் தேர்வு

முன்னாள் படைவீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு: பெங்களூரில் அக்.9ல் தொடங்குகிறது

தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு அக்னிவீர் ஆள் தேர்வு முகாம் கர்நாடகா, பெங்களூரில் நடக்கிறது. அக்.9ம் தேதி துவங்கும் இம்முகாமில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் சென்டர் எம்எஸ்நகர் கேட், பயிற்சி பட்டாலியன் 3ல் வருகிற அக்.9ம் தேதி அக்னிபாத் திட்டத்திற்கான அக்னி வீர் தேர்வு துவங்குகிறது. இதில் ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் வாரிசுகள், முன்னாள் படைவீரர்கள், விதவைகள், போர் விதவைகள் ஆகியோரின் வாரிசுகள், ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் உடன் பிறந்தவர்கள், மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பங்கேற்கலாம். விளையாட்டு வீரர்கள் பொது பிரிவிற்கான தேர்வில் பங்கேற்கலாம்.

அக்.9 மற்றும் 10ம் தேதிகளில் பொது பிரிவில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். இவர்கள் நீச்சல், ஹாக்கி, பாக்சிங், ஸ்குவாஸ், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 12ம் தேதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் 1.6 கிமீ ஓட்டம் நடத்தப்படும். இதற்காக பெங்களூரில் காலை 4.30 மணிக்கு ஆஜராக வேண்டும். காலை 7 மணிக்கு பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அக்.13ம் தேதி உடல் தகுதித் தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு, 15ம் தேதி தட்டச்சுத் தேர்வு, 16, 17ம் தேதிகளில் மருத்துவ தேர்வுகள் நடக்கிறது.

அக்னிவீர் பொது பணி, விளையாட்டு வீரர்கள் பொது பிரிவு, ஆகியவற்றிற்கு 17.5 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.2005 முதல் 01.07.2009்க்குள் பிறந்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக மோட்டார் வாகனம் இயக்கும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு டிரைவர்கள் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அக்னிவீர் ஸ்டோர் கீப்பர் பணிக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்2 வில் ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றுடன் கணக்கு புத்தகங்கள் இருப்பு வைத்தல் குறித்தும் படித்திருக்க வேண்டும். அக்னிவீர் டிரேட்ஸ்மேன் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஹவுஸ்கீப்பர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்.9ம் தேதி துவங்கும் இம்முகாமில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.