Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அக்னிபாத் திட்டத்தில் புதிய மாற்றம்; அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டுகள் கூடுதல் பணி நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அக்னிபாத் திட்டத்தில் முக்கிய மாற்றத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. முப்படைகளின் பரிந்துரையின்பேரில் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது. இதன்படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணி முடிந்து வெளியேற இருக்கும் அக்னி வீரர்களின் பணிக்காலம் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,‘‘சுமார் 18ஆயிரம் அக்னிவீரர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற மூன்று வாரங்கள் இருந்த நிலையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுப்ரமணி, ‘‘அக்னிபாத் திட்டத்தின்படி, அக்னிவீரர்களின் பணிகாலம் 4 ஆண்டுகளாக இருந்தது. 4 ஆண்டு காலம் முடிவடையும்போது, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு தகுதிக்கேற்ப ஆயுதப்படைகளில் வேலை வாய்ப்பு தரப்படும். தற்போது செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி மீதமுள்ள 75 சதவீத அக்னிவீரர்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த நீட்டிக்கப்பட்ட காலம் முடிந்தபிறகு தகுதிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்து தொடர்ந்து பணியாற்ற விரும்பும் நபர்கள் ஆயுதப்படைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்” என்றார்.

மேலும் ஒன்றிய அமைச்சரவையில், நாட்டின் ஒட்டுமொத்த புள்ளிவிவர அமைப்பையும் சீரமைப்பதையும் தரவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட விஸ்தார் திட்டத்துக்கு ரூ.4371 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள்: குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாளுவதற்காக விரைவு சிறப்பு நீதிமன்றங்களை வலுப்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை தொடரவும், அவற்றின் எண்ணிக்கையை 779ல் இருந்து 850ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் ரூ.3,778.04 கோடியில் செயல்படுத்தப்படும். அமைச்சரவையில் லித்தியம் மற்றும் நிக்கல் போன்ற முக்கியமான கனிமங்களின் செயலாக்கத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2814கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.