Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய 'இரட்டைத் தாக்குதலில்' குழந்தைகள் உட்பட 35 பேர் பலி

இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய வெற்றியால் பாகிஸ்தான் பெருமிதம் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது . 'இரட்டைத் தாக்குதல்' என அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இஸ்லாமாபாத் படைகள் நடத்திய தரைவழி தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

பாகிஸ்தானின் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. மேலும், தங்கள் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்பதை காபூல் அதிகாரிகளும் பலமுறை மறுத்துள்ளனர்.

கிடைத்த தகவல்களின்படி, பாகிஸ்தான் விமானப்படை (PAF) விமானங்கள் இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு, ஆப்கானிஸ்தானின் மூன்று மாவட்டங்களான பக்திகாவில் உள்ள கியான், பக்தியாவில் உள்ள சாம்கானி மற்றும் குனாரில் உள்ள மரவாரா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தின.

முதல் குண்டுவீச்சு நடந்து வெறும் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாலை 12:55 மணிக்கு, புகைந்துகொண்டிருந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்களையும் அலறிக்கொண்டிருந்த குழந்தைகளையும் கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது , ​​பாகிஸ்தானிய விமானங்கள் மீண்டும் திரும்பி வந்து, ஆயுதமற்ற மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் மீது இரண்டாவது கட்டமாக குண்டுகளை வீசியுள்ளன. திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த இரண்டாவது தாக்குதலே, இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.