அடால்ஃப் ஹிட்லரின் ரத்தமாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனைகளில் அடைப்படையில் நாஜி தலைவருக்கு கால்மன் நோய்குறி என்ற அரிய மரபணு கோளாறு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் விவாத பொருளாகியுள்ளன. அடால்ஃப் ஹிட்லர் பற்றிய ஒரு புதிய ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட ஆராய்ச்சியில் ஹிட்லரின் டிஎன்ஏ ரகசியம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அவருக்கு கால்மன் நோய்குறி என்ற அரிய மரபணு கோளாறு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோளாறானது பாலியல் உறுப்புகளின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. அதுமட்டும் இல்லாமல் இந்த வகையான கோளாறுகள் பருவமடைதல் செயல்முறைகளை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தகூடிய மரபணு கோளாறு ஆகும். இந்த நோய் குறியும் அறிகுறிகளில் ஒன்று விதைப்பை இறங்காமல் இருப்பது மற்றும் சிறிய அளவிலான ஆண் உறுப்பு ஆகும். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட சோபாவில் இருந்த இரத்தக்கரையில் இருந்த சேகரிக்கப்பட்ட டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்ததில். அவருக்கு கால்மன் நோய்குறி இருந்ததற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2015ல் கண்டறியப்பட்ட 1923ஆம் ஆண்டை சேர்ந்த மருத்துவ அறிக்கை ஒன்று ஹிட்லருக்கு ஒரு விதைப்பை மட்டுமே இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டது.
இப்ப கிடைத்துள்ள டிஎன்ஏ முடிவுகள் இந்த கூற்றை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த டிஎன்ஏ பகுப்பாய்வானது ஹிட்லருக்கு யூத வம்சாவலி இருந்திருக்கலாம் என்று நீண்ட காலமாக பரவிவந்த வதந்தியையும் நிராகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளன. இந்த முக்கியமான ஆய்வுகள் அனைத்தும் ஹிட்லஸ் டிஎன்ஏ பிழுஏப்ரின்ட் ஆப் ஏ டிக்டாட்டோர் என்ற புதிய ஆவணப்படத்தில் இடம்பெறவுள்ளன. ஹிட்லரின் இந்த கோளாறுகள் அவரது கொடூரமான இனவறி கொள்கைகளையே அல்லது உலகப்போர் குற்றங்களையோ ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது விளக்கவோ முடியாது என்று ஆய்வு குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
