ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி (Rashtriya Indian Military College (RIMC) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் செயல்படும் ஆண்களுக்கான ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகும். இது பிரிட்டானிய இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும். பிரிட்டனின் ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு, ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியை 1922இல் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அரசு நடத்திவருகிறது. இக்கல்லூரியில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை ராணுவப் பயிற்சியையும் வழங்குகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் சேர ஆண்டுதோறும் 2 முறை நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது மாணவிகள் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 1, 2026ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் யாராவது ஒருவர் தமிழகத்தில் வசிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2026 நிலவரப்படி குறைந்தது 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதுக்கு மேல் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் 2.7.2013க்கு முன்னதாகவும்1.1.2015க்கு பின்னதாகவும்பிறந்திருக்கக்கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. ராணுவக் கல்லூரியில் அனுமதிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில், 2026ம் ஆண்டு ஜூலை பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு, வருகிற டிசம்பர் 7ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டுவருகின்றது.
இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவம் பெறுவதற்கான வழிகள்: இதற்கான விண்ணப்பப் படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்களை ஆன்லைன் (online) மூலம் பெறுவதற்கு www.rimc.gov.in என்ற வலை தளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600, அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555 செலுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட பணம் செலுத்திய ரசீது (Receipt of payment) மற்றும் தங்கள் முகவரியைத் தெளிவாக குறிப்பிட்டு விரைவு அஞ்சல் மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003. (அல்லது) விண்ணப்பப் படிவத்தை வரைவோலை (Demand Draft) மூலம் பெறுவதற்கு தெளிவான அஞ்சல் எண் உள்ள தங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், THE COMMANDANT RIMC FUND”, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN, (BANK CODE- 1399), UTTARAKHAND கிளையில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர் ரூ.600 அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555 தொகைக்கு வரைவோலையாக (Demand Draft) THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு, வருகிற அக்டோபர் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றுசேர வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www. rimc. gov. in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்யும் முறை: இத்தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும்நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும்கொண்டதாக இருக்கும். எழுத்துத்தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும்பொதுஅறிவு ஆகிய தாள்களைக்கொண்டது.கணக்குத்தாள்மற்றும்பொது அறிவுத்தாள்ஆகியன ஆங்கிலத்தில்அல்லது இந்தியில்விடையளிக்கப்பட வேண்டும்.
எழுத்துத்தேர்வின்அடிப்படையில்தகுதியானவர்தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும்நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வு பற்றிய விவரம் பின்னர்அறிவிக்கப்படும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கான தேதி மற்றும் இடம், தேர்வு எழுதும் மாநிலத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வானது விண்ணப்பதாரர்களின்அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
நேர்முகத் தேர்விற்குப்பின் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் மருத்துவப் பரிசோதனை சேர்க்கையின் பிரிவே தவிர சேர்க்கையின் இறுதி அல்ல என்பதை அறியவும்.


