Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் சான்​றிதழ் பயிற்​சி மாணவர் சேர்க்கை

சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​துவக் கல்​லூரி​யில் வழங்கப்படவுள்ள ஓராண்டு சான்​றிதழ் பயிற்​சிகள் குறித்து சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்பில், சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்து​வக் கல்​லூரி​யில் 2025-26ஆம் கல்​வி​யாண்டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

இந்த பாடப்​பிரிவுகளுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்பட்டு வருகின்றன. இது தொடர்​பான கூடுதல் விவரங்​கள் < https://gmcomu.ac.in > என்ற இணை​யதளத்​தி​லும், ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் அறி​விப்​புப் பலகை​யிலும் இடம்பெற்​றுள்ளன. அதன்​படி 17 வயது நிறைவுசெய்​து, தேர்​வுக் குழு​வால் பரிந்​துரைக்​கப்​பட்ட, 10ஆம் வகுப்பு அல்​லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதா​ரர்​கள் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிக்​கலாம். ஓமந்​தூ​ரார் அரசு மருத்​துவக் கல்​லூரி முதல்​வர் அலு​வல​கத்​தில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று வரும் நவம்பர் 14ஆம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். கலந்​தாய்வின்போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்​திலேயே வழங்கப்படும் என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.