தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டல், கழித்தல் கணக்குப்போட்டு இப்போதே குமுற தொடங்கிவிட்ட இலைக்கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தொகுதி கூட்டல், கழித்தல் கணக்கு போட்டு அல்வா மாவட்ட இலைக்கட்சியினர் இப்போதே குமுற தொடங்கிவிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘அல்வா மாவட்டத்தில் மொத்தம் இருப்பது 5 தொகுதிகள். இதில் 3 தொகுதிகளை மலராத தேசிய கட்சி குறி வைத்துள்ளதாம்.. இதற்கு உதாரணமாக, கடந்த மக்களவைத் தேர்தலில் தாங்கள் இலை கட்சியை விட அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளோம் என அந்த கட்சியின் மாநில தலைவரும், அல்வா ஊரின் எம்எல்ஏவும் தனது வாதத்தை முன் வைக்கிறாராம்.. 5 தொகுதிகளில் 3 என்றால் என்ன கணக்கு. பெரும்பான்மை தொகுதிகளை மலராத தேசிய கட்சிக்கு வார்த்து விட்டால் நாங்கள் எங்கே போவது என இலை கட்சியினர் கூட்டல், கழித்தல் கணக்கு போடுகின்றனராம்.. முதலில் கூட்டணி உடன்பாடு எனக்கூறி கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு இப்போதே கெடுபிடியை தொடங்கி விட்டனரே, இனியும் போக, போக என்னவெல்லாம் நடக்கும்.. தேர்தல் நேரத்திலும் நம்மை உருட்டி, மிரட்டி தொகுதிகளை பறித்துக் கொண்டால் நாம் போட்டியிட எங்கே போவது? இதற்காக தான் இத்தனை நாட்கள் கட்சிப் பணியாற்றினோமா, மீண்டும் இந்த கூட்டணி வேண்டாம் என்றோமே என இலை கட்சியின் அல்வா மாவட்ட முகாம்களில் இப்போதே குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உயர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்து... காத்திருந்து... காலம் போனதுதான் மிச்சம் என்ற முடிவுக்கு வந்த சர்ச்சைக்கு பெயர்போன மலராத கட்சி மாஜி தேசிய செயலாளர் களத்தில் குதிக்கப் போறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தைச் சேர்ந்த மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளருக்கு தேர்தலில் போட்டியிடும் ஆசை வந்துள்ளதாம்.. தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கட்சியின் தயவால் கவர்னர் போன்ற உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்து, காத்திருந்து... நாட்கள் போனது தான் மிச்சம் என்ற முடிவிற்கு வந்த மாஜி, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலாவது சீட் கிடைக்கும் என காத்திருந்து நொந்து போனாராம்.. இதனால், அரசியல் களத்தில் இருந்தே ஒதுங்கி விடலாம் என்ற முடிவில் இருந்த அவருக்கு தற்போது புதிய ஆசை வந்துள்ளதாம்.. இலைக்கட்சியின் தயவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது எம்எல்ஏவாக வந்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம்.. இதற்காக மாவட்ட தலைநகர் தொகுதி அல்லது அவர் வசிக்கும் குடி என முடியும் என தொகுதிகளை குறிவைத்துள்ளாராம்.. இந்த தகவல் அறிந்த மலராத கட்சியினர், யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாத அளவிற்கு நல்ல பெயரை சேர்த்து வைத்திருக்காரு.. இந்த நிலையில் அவர் எப்படி போட்டியிட முடியும், அவர் போட்டி என அறிவித்தாலே போதும் எதிர்தரப்பு வேட்பாளர் சுலபமாக வெற்றி பெற்றுவிடுவார் என கிண்டலாக கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்தில் சீட் பிடிக்க நேரடியாகவே இலைக்கட்சி தலைவரிடம் போய் கர்ச்சீப்பை போட்டு விட்டு வந்துட்டாரோ மலராத கட்சியின் லெக்சர் ஒருத்தர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி கூட்டணியில் இருக்கும் மலராத கட்சி ரெண்டாங்கட்ட நிர்வாகிகள் எல்லோரும் இப்பவே சீட் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.. அதுவும் இலைக்கட்சி தலைவரை பிடித்தால் தான் எதுவும் நடக்குமுன்னு நினைக்கிறாங்களாம்.. தூங்கா நகரத்தை பொறுத்தவரையில் இலைக்கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே தலைவர்கள் தானாம்.. ஆளுக்கொரு பக்கமா இழுத்துக்கிட்டு செல்வாங்களாம்.. மாஜி ஒருவர் வீடியோவா வெளியிடுவாராம்.. இன்னொருவர் தெர்மாகோல் என பெயர் பெற்றவராம்.. இப்படியாக ஆளாளுக்கு தங்களது இருப்பிடத்தை காட்டிக்கொண்டே இருப்பாங்களாம்.. இந்த கூட்டத்துக்குள் நுழைவது என்பது ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்றது தானாம்.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அதே ஊரைச்சேர்ந்த மலராத கட்சியின் லெக்சர் ஒருவர், இந்த கூட்டத்துக்குள்ளே சென்றால் எதுவும் தேறாது என்பதை நல்லா தெரிஞ்சிக்கிட்டாராம்.. இந்நிலையில் இலைக்கட்சி தலைவரிடம் சென்று சீட்டுக்கான கர்ச்சீப்பை போட்டுட்டதாக கட்சிக்காரங்க மத்தியில ஒரே பேச்சா இருக்குதாம்.. இந்த வேலையை எப்படி தொடங்கலாமுன்னு திட்டம்போட்ட லெக்சர், தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரரின் நடவடிக்கை எப்படியெல்லாம் இருக்குது.. உங்களுக்கு எதிராக எவ்வழியில் செல்கிறார்.. பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்கிறார் என்பதை புட்டு புட்டு வச்சாராம்.. அதோடு குக்கர்காரருடன் கைகோர்த்து உங்களுக்கு எதிரான வேலையில் ஈடுபடுகிறார் என்பதையும் சொல்லிக்கிட்டே வந்தாராம்.. அப்படியா விவகாரமுன்னு ஆச்சரியமாக கேட்டுக்கிட்டே இருந்த இலைக்கட்சி தலைவர் மெய்மறந்திருந்த நேரத்தில் தூங்காநகரத்துல நான் போட்டியிடும் வகையில் ஒரு சீட் கொடுங்கன்னு சிரிச்சிக்கிட்டே கேட்டிருக்காரு.. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காக இலைக்கட்சி தலைவர், ஓட்டு சதவீதம் எப்படி இருக்குன்னு ஒரு செம கேள்வியை கேட்டிருக்காரு.. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ரெண்டாவது இடத்தை பிடித்ததே நான்தான் என நெஞ்சை நிமித்தி சொல்லியிருக்காரு அந்த லெக்சர்... இவர் கேட்ட தொகுதிகளில் இலைக்கட்சியின் தூங்கா நகரத்து சிங்கங்கள் இருக்குதாம்.. இதையெல்லாம் கேட்டுக்கிட்ட இலைக்கட்சி தலைவரோ பார்க்கலாம் என சொல்லி அனுப்பினாராம்.. இந்த விவகாரங்களை தெரிஞ்சிக்கிட்ட தூங்கா நகரத்து இலைக்கட்சிக்குள்ளாற ஒரே உறுமலா இருக்குதாம்.. இந்த பார்முலா நல்லா இருக்குதேன்னு மலராத கட்சி தலைகள் இலைக்கட்சி தலைவரை நோக்கி வரப்போறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement