வாஷிங்டன்: “தொழிலதிபர் அதானி மற்றும் அவரது குழுமம் தொடர்பான வழக்குகளின் அனைத்து பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும்” என குடியரசு கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரியஔி மின்சக்தி ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி. லான்ஸ் குடன் என்பவர் கடந்த வாரம், “அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்குப் பதிவு செய்தது இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தும்” என கண்டனம் தெரிவித்து அமெரிக்க நீதித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தற்போது, “இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழும நிறுவனங்கள் மீதான அனைத்து வழக்குகளின் பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும்” என லான்ஸ் குடன் அமெரிக்க நீதித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Advertisement


