Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகை விருப்ப மனுவால் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என பதற்றத்தில் இருக்கும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வசூலில் அசத்தும் ஐவர் கூட்டணியால் எந்த பட்ஜெட் பில்டிங் ஆக இருந்தாலும் சம்திங் கொடுக்க மறுத்தால் இழுத்தடிக்கப்படுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நகரத்தை கட்டமைக்க கூடிய பிரிவு இயங்குது.. மாநகரில் உள்ள 100 வார்டுகளில் வீடு, கடை, வணிக வளாகம், மருத்துவமனை, கல்வி நிறுவனம் என எந்த கட்டிடம் கட்டினாலும் இந்த அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகுதான் கட்ட முடியும்.

அப்படி கட்டிட அனுமதி வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கடும் சோதனைகளை சந்திக்க வேண்டி இருப்பதாக புகார் எழுந்திருக்கு.. எல்லா ஆவணங்களும் முறைப்படி சமர்ப்பித்தாலும், ‘அவரை பார்த்தாச்சா...? இவரை பார்த்தாச்சா...?’ எனக்கூறி இங்குள்ள 2 ஆண் ஊழியர்கள், 3 பெண் ஊழியர்கள் என ஐந்து ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து கடுமையாக அலைய விடுகிறார்களாம்.. ‘அப்படி அலைய வேண்டாம் என்றால், நாங்கள் கேட்கிற தொகையை வெட்டுங்கள்.. வேலை தானாக நடக்கும்...’ என்கிறார்களாம்.

சம்திங் கொடுக்க மறுத்தால், ‘உங்களது பைல் மெதுவாகத்தான் நகரும்... எப்போது அனுமதி கிடைக்கிறதோ... அப்போது பில்டிங் கட்டிக்கொள்ளுங்கள்...’ என வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்களாம்.. பைல்களை மறைத்து வைத்துவிடுகிறார்களாம்.. பெரிய பட்ஜெட் பில்டிங் ஆக இருந்தாலும் சரி... சிறிய பட்ஜெட் பில்டிங் ஆக இருந்தாலும் சரி... காசு பார்க்காமல் விடுவதில்லையாம்.. சம்திங் கொடுக்க மறுக்கும் விண்ணப்பதாரர்களை ‘இன்று போய் நாளை வா....’ என பந்தாடுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகை விருப்ப மனுவால் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என வருத்தத்தில் இருக்காங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நான்கெழுத்து பெயர் கொண்ட நடிகை, மலராத கட்சியில் இருந்தபோது ெமடல் மாவட்டத்து பாளையம் என முடியும் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக கடந்த தேர்தலின்போது இருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், நான் தான் வேட்பாளர் என்ற முடிவில் அந்த ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கட்சி பணியாற்றினார்.

ஆனால் தலைமை வாய்ப்பு தரவில்லை. இதனால் மலராத கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அந்த நடிகை, கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த பரபரப்பில் நில விவகாரத்தில் தாமரை கட்சி பிரமுகர் வேறு மோசடி செய்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். விரக்தியில் சேலத்துக்காரரை சந்தித்து இலைக்கட்சியில் ஐக்கியமானார். உடனடியாக அவருக்கு இலைகட்சியில் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது.

தற்போது இலைகட்சியில் விருப்ப மனுக்கள் வாங்கிய நிலையில் நான்கெழுத்து நடிகை, தான் ஏற்கனவே வேலைபார்த்து வைத்திருந்த மெடல் மாவட்டத்து பாளையம் என முடியும் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறி விருப்ப மனு கொடுத்துள்ளாராம்.. சமூகரீதியாக தனக்கு சாதகமாக உள்ளதால், இங்கு ேபாட்டியிட அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.. அவரது ஆர்வத்தால் மெடல் மாவட்டத்து இலைக்கட்சியினர், எங்கே தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் சென்றுவிட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அழகிகளின் படையெடுப்பால் யூனியனில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன தென்மாநில யூனியனுக்கு வெளிமாநில பயணிகள் படையெடுத்தபடி உள்ளார்களாம்.. தொடர் விடுப்பு காலம் என்பதால் புத்தாண்டு கொண்டாட்ட நட்சத்திர அறைகள் எல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டதாம்.. சாதாரண விடுதி அறை கிடைக்காமல் வீடுகளை தேடி அலையும் நிலையை காண முடிகிறதாம்..

நிலைமை இப்படியிருக்க மறுபுறமோ சுற்றுலா எனும் பெயரில் பாலியல் தொழில் அழகிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாம்.. குறிப்பாக ஸ்பா பெயரில் பாலியல் தொழில் கொடிகட்டி பறப்பதால் அங்கும் இளசுகளின் நெரிசல் கூடுதலாகி இருக்கிறதாம்.. சுற்றுலா வளரட்டும் என்ற மாண்புமிகுகளின் வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதோ என உள்ளூர்வாசிகள் முணுமுணுக்கிறார்களாம்.. காக்கிகளிடம் முறையிட்டும் பலன் இல்லாததால் பவர்புல் நிர்வாகிக்கு மாமூல் பட்டியலுடன் மனுக்கள் அனுப்பி உள்ளார்களாம்..

வெளிமாநிலத்தவர் படையெடுப்பால் போக்குவரத்தும் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் புலம்புகிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் நெருங்குவதால் அதிருப்தியில இருக்கும் நிர்வாகிகளை ஐஸ் வைக்கிறாங்களாமே இலைகட்சியினர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கு.. இதையொட்டி, இலை கட்சியில போட்டியிடுவதற்காக விருப்ப மனுகள் பெறுவது தொடங்கியுள்ளதாம்..

இதில் விருப்பம் இருக்குகோ, இல்லையோ பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் பெயர்களில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுமென தலைமை வற்புறுத்தி வருகிறதாம்.. இந்நிலையில, இலை கட்சியில புதிதாக சேர்ந்த நிர்வாகிகள் பலரும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிங்கள அவ்வளவு எளிதில் பார்க்க முடியாத சூழல் இருந்து வந்தாம்..

ஆனா இப்போ தேர்தல் வரஉள்ளதால், அதிருப்தியில இருக்கிற இலை கட்சி நிர்வாகிங்க, கட்சியில புதிதாக சேர்ந்த இளைஞர்கள ஐஸ் வைக்கும் பணியில, இலை கட்சி நிர்வாகிகள் இறங்கி இருக்காங்களாம்.. வெயிலூர் மாவட்டத்தில இலைக்கட்சிய சேர்ந்த நிர்வாகி, அணையான தொகுதியில நான்தான் போட்டியிடுவேன்.  என்னை மறந்திராதீங்கன்னு புதிதாக சேர்ந்த இளைஞர்கள், வார்டு, பகுதி பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் வீட்டிற்கே நேரில் சென்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, போட்டோ எடுத்து குஷிபடுத்துறாங்களாம்..

சொந்த விருப்பு வெறுப்பின்றி, தேர்தலில் வெற்றிக்காக உழைக்கணும்னு ஐஸ் வைத்து வருகின்றனராம்.. கட்சி விஷயமா கூட நாம தேடிப்போனா கண்டுக்காம இருந்த தலைகள் எல்லாம் இப்ப நம்ம வீடு தேடி வந்து ஆதரவு கேட்குதே, தேர்தல் முடிஞ்ச பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தான்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.