புதுடெல்லி: கோவாவில் நைட் கிளப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சனியன்று இரவு இந்த சம்பவம் நடந்த நிலையில் அதன் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லுத்ரா ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தாய்லாந்தின் புகெட் பகுதியில் இருவரும் உள்ளதாக நம்பப்படுகின்றது. இந்நிலையில் இருவருக்கும் எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கோவா காவல்துறை சிபிஐ யின் இன்டர்போல் அதிகாரிகளை அணுகியுள்ளனர். குற்றவியல் விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிப்பதற்காக இன்டர்போல் ப்ளூ நோட்டீஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தேடப்படும் நபருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னரே தப்பியோடியவரை கைது செய்யக் கோரும் சிவப்பு அறிவிப்பை வெளியிட முடியும்.


