Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நடிகர் மீது துப்பாக்கிச்சூடு வழக்கில் 13வது குற்றவாளியாக பெண் கைது: மும்பை குற்றப்பிரிவு அதிரடி

மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் வீட்டின் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அரியானாவைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை ஜூகு பகுதியில் பாலிவுட் முன்னணி நடிகர் டைகர் ஷெராப் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் 18ம் தேதி அவரது வீட்டின் அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் டைகர் ஷெராபின் டிரைவர் உட்பட 2 பேர் காயமடைந்தார்.

இதுகுறித்து ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தீவிர விசாரணைக்காக இவ்வழக்கு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ராஜஸ்தானின் கோட்டா, டெல்லி மற்றும் அரியானாவின் சோனிபட் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் குற்றவாளிகளுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகம் செய்ததாக ராதா மற்றும் பபிதா ஆகிய இரு பெண்களும் அடங்குவர்.

தொடர் விசாரணையில் இந்த கும்பலுடன் தொடர்புடைய சுபேகா பண்டிட் (22) என்ற பெண் அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து அரியானா மாநில போலீசாரின் உதவியுடன் மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம் இவ்வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.