தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்துச் சென்றவர் கைது

Advertisement

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பிரபல தாதா ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் அடியாட்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர்கள் ஓட்டலில் 3 அறைகளை எடுத்திருந்தனர். இதற்கான வாடகை மட்டுமே ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த அறைகளில் வைத்து போதை பார்ட்டி நடந்ததாக கூறப்படுகிறது. அதில் எம்டிஎம்ஏ, கொகைன் உள்பட போதைப் பொருட்கள் பரிமாறப்பட்டதாக கொச்சி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதை பார்ட்டி நடந்தது உறுதி செய்யப்பட்டது. அறையிலிருந்து விலை உயர்ந்த ஏராளமான வெளிநாட்டு மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து தாதா ஓம்பிரகாஷ், அவரது கூட்டாளியான கொல்லத்தை சேர்ந்த ஷிஹாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பார்ட்டியில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் உள்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போலீசார் அளித்த ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பார்ட்டியில் கலந்து கொண்டது குறித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்ட்டினிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே இவர்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றது கொச்சியை சேர்ந்த பினு ஜோசப் என தெரியவந்தது. இவருக்கு கொச்சியிலுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement