Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகர் கட்சியை நாடிப்போகும் குக்கர் கட்சி தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘புதிதாக திறக்கப்பட்ட மைதானத்தால் கொந்தளிப்பில் இருக்காங்களாமே யூனியன்வாசிகள்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பிரெஞ்சு கலாச்சாரத்தை தாங்கிய புதுச்சேரி யூனியனில் ‘அண்ணா’ என்ற திடல் இருக்கு.. இங்கு கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு விளையாட்டு மைதானம் கட்டப்பட்டிருக்கு.. ஓரிரு தினங்களுக்கு முன்பே திறப்பு விழா கண்ட மைதானத்தில் தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக முடிக்கப்பட வில்லையாம்..

கேமரா கண்காணிப்புக்கூட அமைக்கப்படாததால் முதல்நாளிலே வீரர்களின் முணுமுணுப்புகளை கேட்க முடிந்ததாம்.. நிலைமை இப்படியிருக்க, திறப்பு விழா கண்ட மறுநாளே சமூக விரோதிகள் அங்கு படையெடுக்க தொடங்கி விட்டார்களாம்.. இரவு நேரங்களில் அந்த ரங்கமான விளையாட்டுகளின் கூடாரமாக மாற்றும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளார்களாம்.. சரக்கு பாட்டில்களும் சிதறிக் கிடக்கவே நேரில் விசிட் அடித்த மக்கள் பிரதிநிதியோ அதிகாரிகளிடம் டென்ஷன் ஆனாராம்..

உள்ளூர்வாசிகளோ எந்த நோக்கத்திற்காக மைதானம் கட்டினார்கள் என கொந்தளிக்க தொடங்கி இருப்பதால் பிரச்னை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொன்னானவர் பற்றிய சமூகவலைதள பதிவுகள்தான் கடைகோடி மாவட்டத்தில் அரசியல் களத்தை சூடுபடுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் 10 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொன்னானவர் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மீண்டும் களம் காண ஆசைப்படுகிறாராம்..

ஆனால் அவரை கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லையாம்.. இதனால அவர் ரொம்பவே அதிருப்தியில் இருக்காராம்.. அவருக்கு சீட் கிடைக்காவிட்டால் நடிகர் கட்சியில் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.. எனவே, மேலிடம் அவரை சமாதானம் செய்து வருகிறதா சமூக வலைதளங்களில் சிலர் பரப்பியிருக்காங்க.. இது மலராத கட்சியினரை சார்ந்தவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்..

இதனை செய்த ‘தற்குறிகள்’ யார் என்று தங்களுக்கு தெரியும் என்று அவர்கள் பதிலுக்கு பதிவுகள் போட இந்த விஷயம் மாவட்டத்தில் அரசியல் களத்தை சூடுபடுத்தி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாய்க்கு தோள்கொடுக்கும் மகனால் சேலத்துக்கனியில் புதிய தீப்பொறி கிளம்பியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி கட்சியில் தந்தை, மகனுக்கு இடையிலான கட்சி சொத்து மோதல் முடிந்த பாடில்லையாம்..

இருவரும் நான்தான் ராஜா என கூட்டணி பேச்சுக்களை நடத்த தயாராகி விட்டார்களாம்.. இருதரப்பும் மாறிமாறி பழித்துரைத்தல் மேற்கொள்வதால் கனியின் அடிமட்ட தொண்டர்கள் சோகத்தில் உள்ளார்களாம்.. கனியின் அதிகார மோதல் தற்போது புதிய திசைநோக்கி பயணிக்க தொடங்கி உள்ளதாம்.. தந்தை தள்ளாட ஆரம்பித்து விட்டதால், மகளை கட்சி வாரிசாக்க தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தற்போது பசுமையும் கூடுதலாக வந்துள்ளதால் ஜெயிக்கப் போவது அக்காவா, தம்பியா என மோதல் திரும்பி இருக்கிறதாம்..

இதனால் தாய்க்கு துணையாக இரு மகன்களும் தோள்கொடுக்க தொடங்கி விட்டார்களாம்.. பேரன்கள் வரவால் தந்தை தாஸ் குஷியடைய ஆளுக்கொரு பணிகளாக பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.. இதன் முதல் பிரதிபலிப்புதான் மாமனாருக்கு எதிரான சுகந்தமானவரின் சேலம் வாய்ஸ் சரவெடியாம்.. இந்த தீப்ெபாறி நிர்வாகிகளிடம் நீடிப்பதால் அக்கட்சிக்கு எதிர்காலம் கனியுமா என கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலர் பார்ட்டி ரெண்டு துண்டாகி திண்டாடுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல மலர் பார்ட்டியில ஏற்கனவே, வந்தா வாசி, ஆறு அணி, போ ஊருன்னு 3 சட்டத்தோட மன்ற தொகுதிகள்ல 2 அணிகளாக துண்டாகி திண்டாடுதாம்.. இப்ப இந்த திண்டாட்டம் செய்யாறு தொகுதியிலயும் தொடங்கியிருக்குதாம்.. செய்யாறு தொகுதியில திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துல விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுலத்தான் உறுப்பினருங்க இருக்குறாங்க..

ஆனாலும், பிஎல்ஏ 2 மாநாட்டை 3 எழுத்து கொண்ட ஜெனரல் செக்ரட்ரி நடத்துனாராம்.. சொந்த பணத்தையும் செலவு செஞ்சதாக சொல்றாங்க.. பார்ட்டியிலயும் கொடுத்திருக்குறாங்க போல, இதுல, அந்த ஜெனரல் செக்ரட்ரிக்கு எதிர்கோஷ்டியை சேர்ந்த ஸ்டேட் பொறுப்புல இருக்குற ஒருத்தரு, உள்ளடி வேலை செய்றாராம்.. தலைமை கொடுத்த பணத்துல பங்கு கொடுன்னு வரிஞ்சுகட்டிக்கிட்டு நிற்கிறாராம்.. கொடுத்த பணத்தை விட நான் சொந்த பணத்தை போட்டுசெலவு செஞ்சிருக்கேன் என்கிட்டயேவா?...

என்று பஞ்சாயத்து ஆரம்பிச்சிருக்குது.. டிஸ்டரிக் செக்ரட்ரி கிட்ட இந்த பஞ்சாயத்து போய் நின்னுருக்குது.. அவரும் எதுவும் கண்டுகொள்ளவில்லையாம்.. இப்படி உள் கட்சியிலயே, கோஷ்டி பூசல்கள் கொடி கட்டி பறக்குறதால, கிரிவலம் மாவட்டத்துல ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியும் துண்டாகி, திண்டாட்டத்துல இருக்குதாம்.. சமீபத்துல நடந்த முன்னாள் பிரதமர் பர்த்டேவும், செய்யாறு தொகுதியில ஒருத்தரு ரோட்டுக்கு இந்த பக்கமும், இன்னொருத்தரு அந்த பக்கமும் நின்னு கொண்டாடுனாங்களாம்..

இதை பார்க்குற ஜனங்க என்னப்பா, முதல்ல நீங்க சேருங்க, அப்புறம் ஜனங்க பிரச்ைனய தீர்க்க வாங்கன்னு சொல்லிக்கிட்டு போறாங்களாம்.. இந்த திண்டாட்டம் தான், செய் ஆறு தொகுதியில ஹாட்டாக போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடிகர் கட்சி நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறாராமே குக்கர் கட்சி நிர்வாகி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. முக்கிய கட்சிகள் கூட கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதற்குள் குக்கர் கட்சி தலைமையானவர், மலைக்கோட்டை மாவட்டத்தில் தனது கட்சியில் உள்ள வேட்பாளரை அறிவித்து விட்டாராம்.. இதனால் அந்த வேட்பாளர் குஷியில் இருக்கிறாரு.. தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ என்பதை தாண்டி, அரசியல் வித்தை தெரிந்தவர் இந்த வேட்பாளர் என அவரது கட்சியினரே பேசிக்கிறாங்களாம்..

இதற்கிடையில் நடிகர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து அந்த வேட்பாளர் ரகசியமாக ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.. நான் இருக்கிறேன், நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறேன் என நடிகர் கட்சி நிர்வாகிகளிடம் உறுதி அளித்திருக்காரு.. இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுவதும் அரசல் புரசலாக ஓடிட்டு இருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.