தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி..!!

Advertisement

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைதாகினர். அதன் பிறகு அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில், போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என தீவிர விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்ரீகாந்துக்கு ஒருகிராம் கொக்கைனை ரூ.12,000க்கு விற்றதாக விசாரணையில் பிரசாத் தகவல் தெரிவித்தார். ஸ்ரீகாந்துக்காக பிரசாந்த் என்பவர் தன்னிடம் போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் வாக்குமூலம் அளித்தார்.

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் 2 மணிநேரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில்அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறிய பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் விஷ்ணுவர்தன் தம்பியும், நடிகருமான கிருஷ்ணாவுக்கும் தொடர்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News