நாளை மறுதினம் அபுதாபியில் மினி ஏலம்: ஐபிஎல் அணிகள் விடுவிப்பு வீரர்கள் பட்டியல் அளிக்க நாளை கடைசி நாள்
மும்பை: 19வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அபிதாபி நகரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் பிசிசிஐ நடத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்கள், பரிமாற்ற வீரர்கள் பட்டியலை அறிவிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளாகும்.
இதில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் அதிகாரப்பூர்வமாக 2 வீரர்களை வர்த்தக மாற்றத்தில் பெற்றுள்ளது. குஜராத் அணியில் இருந்து வெ.இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ரூ.2.60 கோடிக்கும், லக்னோ அணியில் இருந்து ஷர்துல் தாகூரை ரூ.2 கோடிக்கும் மும்பை வாங்கி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், முகமது ஷமி, ராகுல் சாகரை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஷமியை ஏலத்திற்கு முன் வாங்க லக்னோ, டெல்லி அணியில் முயற்சி மேற்கொண்டுள்ளன. கேகேஆர் அணி துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரையும், லக்னோ அணி ஸ்டோய்னிசையும் விடுவிக்க இருப்பதாக தெரிகிறது.