Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விளம்பரப் பலகை அகற்றும் விவகாரம்: போலீசில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி

கொல்கத்தா: கொல்கத்தாவில் தனது அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி செவ்வாய்க்கிழமை போலீஸில் ஆஜரானார். கட்சி சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கும் தனியார் பாதுகாவலர்களுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அபிஷேக் பானர்ஜிக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அவர் ஆதரவாளர்களின் கோஷங்களுக்கு மத்தியில் ஷேக்ஸ்பியர் சரணி காவல் நிலையத்துக்கு வந்தார். இந்த விவகாரத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டில் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார்.