சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மியி பஞ்சாபின் அமிர்தசரஸ் வடக்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவான குன்வர் விஜய் பிரதாப் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் குன்வர் விஜய் பிரதாப் நேற்று முன்தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சமானா தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சேத்தன் சிங் ஜவுரமாஜ்ரா மற்றும் பாட்டியாலா மாவட்டத்தின் சனூர் தொகுதியை சேர்ந்த ஹர்மீத் சிங் பதன் மாஜ்ரா ஆகியோரும் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகினார்கள். இவர்கள் மூவரும் டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.


