Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இனி ரூ.20 லட்சம் அபராதம்-ஏர்டெல், ஜியோ, VI நிறுவனங்கள் ஷாக்! இடியை இறக்கிய TRAI

டெல்லி : வாடிக்கையார்களின் புகாருக்கு தீர்வு காணவில்லை என்றால் 20-லட்சம் ரூபாய் வரை இனி அபராதம் விதிக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் புதிய விதிமுறையால் தொலைத்தொடர்பு நிர்வனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஜியோ ,ஏர்டெல் ,வோடாபோன் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் புகார்களை மிக அலட்சியமான முறையில் கையாளுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதாவது 10,000 -க்கும் மேற்பட்ட சந்தாதார்களை கொண்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட கூடிய புகார் மையங்களை நடத்தவேண்டும் என்றும் இந்த புகார் மையங்களில் குறைந்த பட்சம் 16 மணி நேரமாவது மனிதர்கள் சேவையில் இருக்க வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும் மொபைல் செயலி ,இணைய தளம் மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் சேவை எண்கள் போன்ற முறைகளில் புகாரளிக்கும் வசதியையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறித்து கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியோக உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.இது மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் புகாருக்கு தீர்வு காண முதலில் 30 நாட்கள் வரை கால அவகாசம் இருந்தது .ஆனால் தற்போது அது 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களுக்குள் புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் இருந்தால் முதல் புகாருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இதே தவறு மேல் முறையிட்டில் மீண்டும் நடந்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு காலாண்டிற்கு 20-லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் அதிரடியாக அறிவித்துள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக தீர்த்து வைக்கப்பட்ட அனைத்து புகார்களின் எண்ணிக்கை சராசரியாக எவ்வளவு நாட்களுக்குள் புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டது, அதற்கு வாடிக்கையாளர்கள் வழங்கிய மதிப்பீடுகள் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.