Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இஸ்ரோவில் 95 அப்ரன்டிஸ்கள்

ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சிகள்:

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 62 இடங்கள்:

i) கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்: 23 இடங்கள்

ii) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்: 28 இடங்கள்

iii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 3 இடங்கள்.

iv) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 4 இடங்கள்

v) சிவில் இன்ஜினியரிங்: 1 இடம்

vi) பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி): 1 இடம்

vii) நூலக அறிவியல்: (எம்லிஸ்): 2 இடங்கள்.

உதவித் தொகை: ரூ.12,300.

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியல் பிரிவுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து முதல் வகுப்பில் நூலக அறிவியலில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

2. டிப்ளமோ அப்ரன்டிஸ்: 25 இடங்கள்.

i) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 3 இடங்கள்

ii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 3 இடங்கள்

iii) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்: 6 இடங்கள்

iv) சிவில் இன்ஜினியரிங்: 1 இடம்

v) கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்: 7 இடங்கள்

vi) கமர்ஷியல் பிராக்டீஸ்: 5 இடங்கள்.

உதவித் தொகை: ரூ.10,900.

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். கமர்ஷியல் பிராக்டீஸ் பாடத்திற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. டிரேடு அப்ரன்டிஸ்: 8 இடங்கள்.

i) எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்:

4 இடங்கள்.

ii) மிஷினிஸ்ட்: 1 இடம்.

iii) எலக்ட்ரிக்கல்: 1 இடம்.

iv) ஐடி-டிஎஸ்எம்: 1 இடம்.

v) பிட்டர்- 1 இடம்.

உதவித் தொகை: ரூ.9 ஆயிரம்.

தகுதி: பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 27,28ம் தேதிகளில் உ.பி., லக்னோவில் நடத்தப்படும். 2ம் கட்டமாக நேர்முகத்தேர்வு செப்.3,4ம் தேதிகளில் அந்தமானில் ஸ்ரீவிஜய்புரத்தில் நடைபெறும். மூன்றாம் கட்டமாக நேர்முகத்தேர்வு கர்நாடகா, பெங்களூரில் செப்.9,11ம் தேதிகளில் நடைபெறும்.

பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் தங்களைப் பற்றிய விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து பின்னர் www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2026.