Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வார இறுதியை முன்னிட்டு 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: ஜூன் 27ம் தேதி(வெள்ளிக்கிழமை) முகூர்த்தநாள், ஜூன் 28ம் தேதி (சனிக்கிழமை) , 29ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், கோயம்பேட்டிலிருந்தும், மாதவரத்திலிருந்தும் என மொத்தம் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,240 பயணிகளும் சனிக்கிழமை 2,182 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,727 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என போக்குவரத்து துைற தெரிவித்துள்ளது.