பணியிடங்கள் விவரம்:
1. சட்ட உதவியாளர்: (லீகல் அசிஸ்டென்ட்): வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று படிப்பை பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 3 வருடம் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. உதவி இன்ஜினியர்/இளநிலை இன்ஜினியர் (சிவில்). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவி பிரிவு அலுவலர்: வயது: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
(துறை வாரியாக, பணி வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.) டிஎஸ்எஸ்எஸ்பி என அழைக்கப்படும் டெல்லி சபார்டினேட் சர்வீஸ் செலக்சன் போர்டால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் பொதுஅறிவு, பொது ஆங்கிலம் மற்றும் கணித நுண்ணறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் இ.மெயிலில் தெரிவிக்கப்படும். கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி இ.பே மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (25.03.2026).


