Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாய நிலங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள; இனி 9 ஆவணங்கள் கட்டாயம் தமிழக அரசு உத்தரவு!!

சென்னை: விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்க்கு மாற்றுவதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், விதிகளில் தமிழ்நாடு அரசு மேலும் பல திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகளில் பல திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது.

அதாவது விளைநிலங்களை விவசாயம் இல்லாத பயன்பாட்டிற்கு மாற்ற, கட்டுமான பணிகள் அல்லது பிற பணிகள் மேற்கொள்ளுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலானது வெளியிடப்பட்டுள்ளது. நிலத்தின் கிரையம் அல்லது குத்தகை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், நிலத்தின் பட்டா நகலை கொடுக்க வேண்டும், அதே போன்று நிலத்தின் மழைநீர் அல்லது கழிவு நீர் வெளியேறக்கூடிய வழியை காட்டும் வரைபடத்தை கொடுக்க வேண்டும்.

அதேபோல் நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்குக்குள் உள்ள கட்டிடங்களுடைய வரைபடத்தை சமர்ப்பிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட நிலத்தின் சிட்டா நகல், என மொத்தமாக 9 சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டாய அறிவிப்புகளை அரசு வெளியீட்டு உள்ளது.

விளைநிலம் தொடர்பான சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மை துறை இணை இயக்குனர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளுடன் சமர்ப்பித்து, தடையில்லா சான்றுகளையும் பெற வேண்டும் என்று, இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விளைநிலங்களில் வீடுகள் அல்லது கட்டிடம் கட்ட விரும்பக்கூடியவர்கள், நில ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் மட்டும் போதாது, நிலத்தின் சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேற்ற வசதி உள்ளிட்டவைக்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான், இந்த புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு, இந்த கட்டாயம் இல்லை என்று சொல்லப்படும் நிலையில், இனி இந்த 9 ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கூறப்படுகிறது.