Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9195 டிரைவர், டிரேட்ஸ்மென்கள்

பணி வாரியாக காலியிடங்கள் விவரம்: டிரைவர் (ஆண்)- 3176, மோட்டார் வெஹிகிள் மெக்கானிக் (ஆண்)- 739, மாலி- 142 (ஆண்- 141, பெண்-1), கார்பென்டர் (ஆண்)-123, டெய்லர்- (ஆண்)-195, பெண்-2, பிராஸ்பேண்ட் (ஆண்)-157, பெண்- (18), பைப் பேண்ட் (ஆண்)-32, பெண்-16, பக்லர் (ஆண்)-1263, பெண்-11, பார்பர்- (ஆண்)-231, ஹேர் டிரஸ்ஸர் (பெண்)-3, பெயின்டர் (ஆண்)-83, பெண்-1, சமையலர் (ஆண்)-1426, சபே கரம்சாரி (ஆண்)-547, வாட்டர் கேரியர் (ஆண்)-502, பெண்-27. வாஷர்மேன் (ஆண்)-363, மேசன் (ஆண்)-13, எலக்ட்ரீசியன் (ஆண்)-7.

சம்பளம்: ரூ.21,700- 69,100.

வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி டிரைவர் பணிக்கு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேசன்/குக் பணிகளுக்கு ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் பணி அனுபவ சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பார்பர்/வாஷர்மேன்/வாட்டர் கேரியர்/ சபே கரம்சாரி பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்திறன் சோதனை, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 10ம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

உடற்திறன் தேர்வில் ஆண்கள் 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8.30 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2026.