Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுச்சேரி அரசு பல் மருத்துவமணை வங்கிக்கணக்கில் 8 கோடி ரூபாய் மாயம்; சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவகல்லூரி வங்கிக்கணக்கு, ஹேக் செய்யப்பட்டிருக்கிறது, வங்கி கணக்கை ஹேக் செய்த கொள்ளையர்கள், அதில் இருந்த 8 கோடி ரூபாயை கொள்ளையடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல், மருத்துவமணை வங்கிக்கணக்கை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அதில் இருந்த 8 கோடி முதல், 8 அரை கோடி வரை கொள்ளை அடித்த சமபவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல் மருத்துவ கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவப்படிப்புகளை பயின்று வருகின்றனர்,

இதில் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இக்கல்லூரியின் சார்பாக இவர்களுக்கு 2 மாதம் காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை, பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில், நிலுவை ஊதியத்தை உடனடியாக செலுத்த பணியாளர்கள், அரசிடம் தொடர்சியாக கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து இரண்டு மாதத்திற்கான ஊதியம் மற்றும் படித்தொகையை சேர்த்து 8 கோடி ரூபாய் நேற்று கருவூலத்தில் இருந்து சம்பந்தப்பட கல்லூரியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் வங்கிக்கணக்கை மருத்துவமணை நிர்வாகம் சரிபார்த்தபோது, வங்கிக்கணக்கில் அரசு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்ட தொகை காணாமல் போனதை கண்டு கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர், இதற்கிடையில் மர்மநபர்கள் கல்லூரி வங்கிக்கணக்கை ஹேக் செய்து சுமார் 8 அரை கோடி ரூபாய் வரை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து மகாத்மாகாந்தி பல் மருத்துவக்கல்லூரி நிர்வாகம், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், விசாரணையில், ஹச்டிஎப்சி வங்கி கணக்கின் பாதுகாப்பு குறைப்பாட்டை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர்களிடம் கிடுபிடி விசாரணை நடத்தில் வருகின்றனர், புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லுரியின் வங்கிக்கணக்கையை ஹெக் செய்து, பணத்தை சைபர் குற்றவாளிகள் திருடியுள்ள சம்பவம், அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.