1. சூபர்வைசர் (டெக்னிக்கல் மற்றும் கன்ட்ரோல்): 27 இடங்கள். சம்பளம்: ரூ.27,600- ரூ.95,910. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி பாடத்தில் முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சூபர்வைசர்: (அலுவலக மொழி): 1 இடம். சம்பளம்: ரூ.27,600- ரூ.95,910. தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் இந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. செக்ரட்டரியேல் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.23,910- ரூ.85,570. தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அனுபவமும், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 30க்குள்.
4. ஜூனியர் டெக்னீசியன்: (ஜெனரல்):
சம்பளம்: ரூ.18,780- ரூ.67,390.
i) எலக்ட்ரிக்கல்: 12 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) மிஷினிஸ்ட்: 8 இடங்கள். தகுதி: மிஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) பிட்டர்: 20 இடங்கள். தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iv) எலக்ட்ரானிக்ஸ்: 15 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்குமான வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பொதுஅறிவு, ஆங்கிலம், ரீசனிங் மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
www.cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2026.


