டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. கான்ஸ்டபிள் (கால்நடை மருத்துவ பிரிவு): 34 இடங்கள் (பொது-21, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-6, எஸ்டி-4).
2. கான்ஸ்டபிள் (டிரைவர்) (ஆண்களுக்கு மட்டும்): 553 இடங்கள் (பொது-244, பொருளாதார பிற்பட்டோர்-45, ஒபிசி-145, எஸ்சி-81, எஸ்டி-38).
3. கான்ஸ்டபிள் (கார்டனர்): 41 இடங்கள் (பொது-18, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-7, எஸ்சி-9, எஸ்டி-4).
4. கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): 5 இடங்கள் (பொது).
5. கான்ஸ்டபிள் (காப்ளர்): 25 இடங்கள் (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-6, எஸ்டி-2).
6. கான்ஸ்டபிள் (டெய்லர்): 41 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-6, எஸ்சி-9, எஸ்டி-4).
7. கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): 74 இடங்கள் (பொது-32, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-19, எஸ்சி-11, எஸ்டி-5).
8. கான்ஸ்டபிள் (முடிதிருத்துநர்): 43 இடங்கள் (பொது-21, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-3).
9. கான்ஸ்டபிள்: (வெயிட்டர்): 3 இடங்கள் (பொது)
10. கான்ஸ்டபிள் (கார்பென்டர்): 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).
11. கான்ஸ்டபிள் (நர்சிங் ஆர்டர்லி): 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
வயது: கால்நடை மருத்துவ பிரிவு, டிரைவர், நர்சிங் ஆர்டர்லி பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கார்பென்டர் பணிக்கு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
i) கால்நடை மருத்துவப்பிரிவு: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கால்நடை மருத்துவமனையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) டிரைவர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
iii) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று செஞ்சிலுவை சங்கத்தால் அங்கீகாரம் பெற்ற முதலுதவி சான்று மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) இதர பணிகளுக்கு: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்எஸ்பியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தகுதித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கேள்விகள் 10ம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
உடற்திறன் தேர்வு: ஆண்கள் 4.8 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 2.4 கி.மீ., தூரத்தை 18 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.
உடற்தகுதித் தேர்வு: இதில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம்: டிரைவர்/கால்நடை மருத்துவ பணிக்கு ஆண்கள் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். நர்சிங் ஆர்டர்லி பணிக்கு ஆண்கள் 165 செ.மீ., பெண்கள் 155 செ.மீ.,உயரம் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு ஆண்கள் 167.5 செ.மீ., பெண்கள் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலமும், 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மையும் இருக்க வேண்டும். www.recruitment.ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.04.2026.
