Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

7 மயிலாடுதுறை மீனவர்கள் கைது

வேதாரண்யம்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்த தேவராஜ் (38), தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (23), கலைவாணன் (27), சரண்ராஜ் (25) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.30 மணியளவில் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். இதேபோல் தரங்கம்பாடி வானகிரியை சேர்ந்த ராஜேஷ் (29), தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (27), சதீன் (23) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.30 மணியளவில் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் 2 படகுகளை சேர்ந்த 7 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 2 படகுகளையும் சுற்றி வளைத்ததோடு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 மீனவர்களையும் கைது செய்தனர்.