Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 106 விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இரவு தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் தப்பிக்க, மீன்பிடி வலைகளை கடலிலேயே வெட்டி விட்டு தப்பினர். ஆனாலும் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை, ஆரோக்கிய டேனியல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் பெரிக் (40), செந்தில் (50), காளிதாஸ் (46), முத்துசரவணன் (42), முக்கூரான் (40), சீனு மாலிக் (35), சசிகுமார் (40) ஆகிய 7 பேரையும் படகுடன் சிறைபிடித்தனர். மீனவர்களை படகுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.