ஐடிஐ படித்திருந்தால் போதும்
பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ்.
வயது: 05.09.2026 தேதியன்று 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள் விவரம்:
1. பிட்டர்: 180 இடங்கள் (பொது-90, எஸ்சி-27, எஸ்டி-14, ஒபிசி-49). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 இடங்களும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2. வெல்டர் (ஜி மற்றும் இ): 220 இடங்கள் (பொது-111, எஸ்சி-33, எஸ்டி-17, ஒபிசி-59). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 9 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 7 இடங்களும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3. மிஷினிஸ்ட்: 60 இடங்கள்: (பொது-30, எஸ்சி-9, எஸ்டி-5, ஒபிசி-16), இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
4. பெயின்டர்: 40 இடங்கள் (பொது-20, எஸ்சி-6, எஸ்டி-3, ஒபிசி-11). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5. கார்பென்டர்: 40 இடங்கள் (பொது-20, எஸ்சி-6, எஸ்டி-2, ஒபிசி-11). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
6. எலக்ட்ரீசியன்: 110 இடங்கள் (பொது-55, எஸ்சி-17, எஸ்டி-8, ஒபிசி-30). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 3 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
7. ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்: 44 இடங்கள் (பொது-22, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-12). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
8. மெக்கானிக் (மோட்டார் வெஹிக்கிள்): 20 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-5). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9. எலக்ட்ரானிக் மெக்கானிக்: 20 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-10). இவற்றில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindian.gov.in என்ற இணையதளத்தில் ஐடிஐ கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ள வேண்டும். www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.09.2026.



