Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெண்களின் ஆரோக்கியத்தில் பேருதவி தரும் 7 உணவுகள்!

பெண்கள் வீட்டு வேலையிலும் சரி அலுவலக வேலையிலும் சரி அதிக அளவு கவனம் எடுத்துக்கொள்வார்கள். அதனால் உடல் நிலையில் கவனம் என்பது கொஞ்சம் தடுமாற்றமாகதான் இருக்கும். ஆனால் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ அதே போல் உடலை உறுதியாக வைத்துக்கொண்டால் மட்டுமே நம்மால் இருக்கும் காலங்களுக்கு ஆரோக்கியமாக இருந்து குடும்பத்தையும் வழிநடத்த முடியும். பெண்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் 7 முக்கிய உணவுகள்.

* கீரை

பொதுவாகவே பச்சை நிற காய்கள், கீரைகள் எப்போதும் உடலுக்கு அதீத ஆரோக்கியம் தரும். அதில் கீரைகள் டாப் வகை. இதில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது, இது மாதவிடாய் வருவதற்கு முன்பு பருவ வயதுப் பெண்களின் PMS கால உடல்ரீதியான விளைவுகளுக்கு உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் நம் உணவுகளிலேயே குறைந்த செலவில் அதீத ஆரோக்கியப் பலன்கள் கொடுப்பதில் கீரைகள் எப்போதுமே எவர்க்ரீன்.

* பருப்பு வகைகள்

இவை பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வெகுசில உணவுகளில் ஒன்று. அதிக புரதம் இருக்கும் சைவ உணவுகளில் பருப்பு 3-வது இடத்தில் உள்ளது. எனவே, இது ஒரு முக்கியமான உணவாகும், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு வகையான பருப்பும் அதற்குரிய ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது.

* ஓட்ஸ்

ஓட்ஸ் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தினசரி ஆற்றல் தேவைகளைத் தக்கவைக்க உதவும் நார்ச்சத்துக்களின் சிறந்த மூலம். அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டிருக்கின்றன மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தாவர கலவைகளால் நிரப்பப்பட்டுள்ளன.

* பால்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

* ப்ரோக்கோலி

இது பெண்களுக்கான ஆரோக்கியமான உணவு விருப்பங்களில் ஒன்று, ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது, உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்த இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த காய்கறி, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லூடின் (lutein) கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. மேலும் மூளையின் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் மேம்படுத்துகிறது.

* பீட்ரூட்

பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்குகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது. இந்த நன்மைகளுக்குக் காரணம் பீட்ரூட்டில் கனிம நைட்ரேட்டுகள்.

* பாதாம்

பாதாம் ஒரு ப்ரீபயாடிக் உணவு, அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும் போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. மேலும், 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது மற்றும் இதில் போதுமான அளவு மெக்னீசியம் உள்ளது. பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ‘இ’, மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் 5 முதல் 8 பாதாம் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.

- கவிதா பாலாஜிகணேஷ்.